தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீதும் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். மேலும், கடலில் மீன்களுக்காக வைத்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் : இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் கடிதம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க இருநாட்டு தூதரகமும் அதற்கான வழிமுறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அதில் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…