மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சி – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான முதல்வர், நிறுவனம் முழு வீச்சில் செயல்பட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் அளித்தார்.அதில், மத்திய அரசு ரூ8 கோடி நிதி ஒதுக்கவேண்டி உள்ளது. நிதி ஒதுக்கியதும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் 3 மாதத்தில் அமைக்கப்படும்.
மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.