சினிமா புகழை வைத்து மக்களை ஹைஜாக் செய்ய முயற்சி – விசிக தலைவர் திருமாவளவன்
சினிமாவில் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்வர் ஆகலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர் என விசிக தலைவர் பேட்டி.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சினிமாவில் கிடைத்த புகழ் மூலம் மக்களை ஹைஜாக் செய்து விடலாம் என்ற எண்ணம் தமிழகத்தில் உள்ளது. சினிமாவில் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்வர் ஆகலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர்.
மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றோர் உள்ளிட்டோரை ஓரம்கட்டி மக்களை ஹைஜாக் செய்ய நடிகர்கள் முயற்சி செய்கின்றனர். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. மக்களுக்கு தொண்டு செய்ய, கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.
மம்முட்டி, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வராமல் அவர்கள் வேலையை பார்க்கின்றனர் என தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று தெரியவில்லை. அவர் அம்பேத்கர், காமராஜர் பற்றி படிக்க சொன்னது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.