மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி ! மாரிதாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி செய்ததாக மாரிதாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நேற்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு இடையில் கொரோனாவைரஸ் தொற்று பரவல் குறித்து, சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.