உண்மை, தர்மம் வென்றுள்ளது – ஈபிஎஸ்
அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது என ஈபிஎஸ் பேட்டி.
சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றுள்ளது என தெரிவித்தார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் மின்கட்டண உயர்வு என்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.
அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் கருத்து சொல்ல புகழேந்தி யார்?, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவருக்கு கருத்து சொல்ல உரிமை கிடையாது, அவர் பெரிய ஆளே இல்லை, ஊடகங்கள் தான் அவரை வளர்த்துவிடுகிறார்கள். 2021 ஆம் ஆண்டு ஓசூர் சட்டசபை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டார் புகழேந்தி நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றார் எனவும் விமர்சித்த ஈபிஎஸ், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.