இந்திய கிறித்துவ திருமணச் சான்றின் உண்மை வடிப்புகள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
இந்திய கிறித்துவ திருமணச் சான்றின் உண்மை வடிப்புகள் வழங்கும் அதிகாரத்தினை மண்டல துணை பதிவுத்துறை தலைவருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கிறித்துவ திருமணங்கள் தொடர்பான விவரங்கள் அந்தந்த மாவட்ட பதிவாளர்களால் பெறப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிறித்துவ திருமண பதிவு வடிப்புகளின் சான்றிட்ட நகல்கள், தற்போது பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், பதிவுத்துறையின் ஒன்பது மண்டல துணை பதிவுத்துறை தலைவர் அலுவலங்கங்களிலேயே மேற்படி இந்திய கிறித்துவ திருமண உண்மை வடிப்புக்களின் சான்றிட்ட நகல்களை வழங்கும் வகையில் இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம் 1872-இல் சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிறித்துவ திருமண உண்மை வடிப்புகளின் சான்றிட்ட நகலைகளை பெறுவதற்கான தமிழகம் முழுவதிலும் இருந்து தலைநகரான சென்னைக்கு மக்கள் வர வேண்டிய நிலை தவிர்க்கப்படும். இந்த நிலையில், இந்திய கிறித்துவ திருமணச் சான்றின் உண்மை வடிப்புகள் வழங்கும் அதிகாரத்தினை மண்டல துணை பதிவுத்துறை தலைவருக்கு வழங்கியுள்ளது தமிழக அரசு.