லாரிகள் நுழைகிறது, சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுகிறது – கமல்ஹாசன் புகார்
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கமல்ஹாசன் புகார்.
சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
வாக்கு என்னும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே மர்மமான முறையில் wi-fi வசதி ஏற்படுத்தப்படுகிறது என்றும் லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது எனவும் புகார் அளித்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் திடீரென கண்டெய்னர் லாரியில் வருகின்றன. இதனால் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது என தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து கமல்ஹாசன் அளித்த புகார் மனுவை அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் 2021 சட்டமன்ற தேர்தலின் போது கவனத்திற்கு வந்த சில பிரச்சனைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் நீடிக்கும் மர்மங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான மனுவை தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்து சமர்பித்தார். pic.twitter.com/X1OSxdYfly
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 20, 2021