உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் திசையை நோக்கி சென்றது. அந்த நேரத்தில் எதிர் திசையில் இருந்து திருச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் ஆம்னி பேருந்து மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…