‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்னும் நூலை வெளியிட்டார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
சென்னை : இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விகடன் பதிப்பகம் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும், புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில், வெள்ளை நிற சட்டை அணிந்த்துக்கொண்டு நிகழ்ச்சியில் த.வெ.க.தலைவர் விஜய் வருகை தந்தார்.
வருகை தந்தவுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பின், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு, விழா மேடைக்கு விஜய் வருகை தந்துவிட்டார்.
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு, விழா மேடைக்கு விஜய் வருகை தந்துவிட்டார். அதன்பின் தனக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் தவெக தலைவர் விஜய் அமர்ந்தார். அவருக்கு பக்கத்தில் அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு மற்றும் விசிக துணைப் பொதுச் செயலாள ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அமர்ந்திருந்தார்கள்.
இசை மற்றும் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, மேனாள் நீதிபதி சந்துரு, ஆனந்த் டெல்டும்டே, ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனர் ஆதவ் அர்ஜுனா, இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு பொன்னாடை போற்றி கவுரவித்தனர்.
இதனை தொடர்ந்து, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். முதலில் ஆனந்த் டெல்டும்டேக்கும், இரண்டாவதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும் விஜய் இந்த புத்தகத்தை வழங்கினார்.
இப்பொது, புத்தகம் வெளியிட்டதை தொடர்ந்து விஜய் சிறப்புரை ஆற்றவுள்ள நிலையில் அரசியல் ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் பல தொலைக்காட்சி வழியாக புத்தக வெளியீட்டு விழாவை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.