தற்காத்து கொள்வது எப்படி?? நாட்டு மக்களுக்கு நடிகை த்ரிஷா வீடியோ மூலம் விழிப்புணர்வு
உலகம் முழுவது பரவி வருகின்ற கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி நடிகை த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா இவர் யுனிசெஃப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதராக உள்ளார்.இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
@trishtrashers #UNICEF India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
#COVID19 க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.@NHM_TN @DrBeelaIAS @VijayaBaskarofl pic.twitter.com/5V4E05UfhQ— UNICEF India (@UNICEFIndia) March 19, 2020
அதில் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவது, பொது இடங்களில் இருமல் மற்றும் தும்மல் வந்தால் செய்ய வேண்டியவை மற்றும் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி வீடியோவில் விளக்கியுள்ளார்.இந்த வீடியோவை யுனிசெஃப் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.