டிஜிபி திரிபாதி தலைமைச்செயலாளருடன் சந்திப்பு-அவசர ஆலோசனை தகவல்
தலைமைச் செயலாளருடன் தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கி டிஜிபி திரிபாதி திடீர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிரான போராட்டங்களை கண்காணிப்பதற்கு 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி ஏற்கனவே உத்தரவிட்டுருந்தார்.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது , தலைமைச்செயலாளர் சண்முகம் அவர்களை சந்தித்து டிஜிபி திரிபாதி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் வைத்து இந்த அவசர ஆலோசனையானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.