திருச்சி இன்ஸ்பெக்டரால் உயிரிழந்த கர்ப்பிணி உடல் அடக்கம்!
பைக்கில் இருந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உதைத்ததால், விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடல், அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், துவாக்குடி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர், காமராஜ் எட்டி உதைத்ததில், பைக்கில் கணவருடன் வந்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் நேற்று காலை, 10:00 மணிக்கு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கர்ப்பிணிப் பெண் இறப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர், காமராஜ், கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில், தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.