திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது ..
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது.
திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் பகல் பத்து இரா பத்து என 21 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பகல் பத்தின் முதல் நாள் இன்று துவங்கியுள்ளது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ஆன பெருமாள் புறப்பட்டு அர்ஜுன மண்டபத்திற்கு செல்கிறார்.
பெருமாள் பாண்டியன் கொண்டை, வைரப்பதக்கம், முத்துமாலை, பவள மாலை, காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்களை சூடிய படி மூலஸ்தானத்தில் இருந்து அர்ச்சுனா மண்டபத்திற்கு செல்கிறார் . இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி பகல் பத்தாவது நாளின் இரவு பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
மேலும் ஜனவரி 10 ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5 மணிக்கு நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்பட்டு அதற்கான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.