திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இதனிடையே மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அதில் அவர், தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை அறிவிக்கக்கோரி, என முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், இது தென்மாவட்ட மக்களின் ஓட்டுமொத்த விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,2-வது தலைநகரமாக மதுரையை மாற்ற தற்போது கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அரசியலுக்கும், கலையுலகிற்கும் தலைநகராக மதுரை திகழ்கிறது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்றும் கூறினார்.
இந்நிலையில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ கருத்துக்கு நேர்மாறாக கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன்.இன்று அமைச்சர் வெல்லமண்டி நட்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.திருச்சியை 2வது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவுத்திட்டம். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் திருச்சியைதான் 2வது தலைநகராக அறிவிக்க முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக…
சென்னை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னைக்கு வருகை தந்த நிலையில்,…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…