தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வழங்கிய திருச்சி தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி உறையூர் குறத்தெரு அருகிலுள்ள ராமலிங்க நகரில் தனியார் மருத்துவ பரிசோதனை ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆய்வகத்தில் காய்ச்சல், நீரிழிவு, தைராய்டு, குழந்தையின்மை, உடல் பருமன் என அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்படும். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை உறுதி செய்யும் பரிசோதனையை மேற்கொள்ள இந்த ஆய்வகத்திற்கு தான் முதலில் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மேலும் 3 ஆய்வகங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலை உறையூரில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகம் தவறான கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கையை தருவதாக புகார்கள் வந்ததை அடுத்து, அந்த ஆய்வகத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு மற்ற நோய்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாநகராட்சி ஆணையர்கள் அந்த பரிசோதனை ஆய்வகத்திற்கு சீல் வைத்து, ரூ. 5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக அளித்ததற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சார்பிலும், ஆய்வகம் செயல்படும் கட்டிடம் சட்ட விதிகளை மீறி கட்டியுள்ளார் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆய்வகத்திற்கு சீல் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…