திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை..! 10 மாதத்திற்கு பிறகு 1.75 கிலோ நகைகள் மீட்பு..!
திருச்சி சத்திரம் பேருந்து அருகே கடந்த 2-ம் தேதி வரை உள்ள லலிதா ஜுவல்லரியில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன் , சுரேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த கணேசன் ஆகிய கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் , சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் திருச்சி போலீசார் நீதிமன்றம் உத்தரவு பெற்று சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் முருகனிடம் பெங்களூர் போலீசாரும், மதுரை கணேஷிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 19 லட்சம் மதிப்புள்ள 470 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவத்தில் முருகன் , சுரேஷ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான கணேசன், கொடுத்த தகவல் பெயரில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 19 லட்சம் மதிப்புள்ள 3.75 கிலோ நகைகளில் இருந்து 1.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.