திருச்சி கா்ப்பிணி உயிாிழந்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது தடியடி!

Default Image

காவல் துறையினா் திருச்சியில் கா்ப்பிணி உயிாிழந்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை  தடியடி நடத்தி விரட்டியடித்தனா்.

இன்று மாலை திருச்சி துவாக்குடி அருகே வாகன சோதனை நடந்துக்கொண்டிருந்தது. அப்போது திருச்சி துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்த உஷா மற்றும் ராஜா தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உஷா குழந்தையின்மை சிகிச்சை பெற்று தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அதனால் வாகனத்தை ராஜா மெதுவாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருச்சி கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா, கணேஷ் தம்பதிகள் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். ராஜா ஹெல்மட் அணியவில்லை.

இதனால் பயந்துபோன அவர் தவிர்ப்பதற்காக சென்றபோது ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட ஊர்க்காவல் படையினர் விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இதில் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மோட்டார் பைக் சாலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாலையில் விழுந்த உஷா மீது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் கீழே கிடந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்கள், ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பல கிலோ மீட்டர் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சக்தி கணேஷ் ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பின்னர் ஏற்பட்ட  வாக்குவாதத்தின் போது காவல் ஆய்வாளா் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். சாலை மறியல் நடைபெற்ற இடம் திருச்சி – தஞ்சாவூா் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து கடினமாக பாதிக்கப்பட்டது.

ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட காவலா்கள் மீது தண்ணீா் பாட்டில்கள், கற்களை வீசி எறியத் தொடங்கினா். இறுதியில் காவல் துறையினா் தடியடி நடத்தி 3 மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட நபா்களை கலையச் செய்தனா்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்