தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் புதுப்புது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகம், புது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருவெறும்பூர் பகுதியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நிற கார்டு கொடுத்து அதனை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு வரவேண்டும்.
அதன்படி, பச்சை கலர் கார்டு உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன் அன்றும், நீல நிற அட்டை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனி கிழமையும் வெளியில் வரலாம் எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே அனுமதி.
15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வெளியில் வர அனுமதி. ஞாயிற்று கிழமை யாரும் வெளியில் வரக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…
சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…