காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்ள முயற்சி! மாணவர் தப்பி ஓட்டம்!
திருச்சி சட்ட கல்லூரியில் தன்னை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி மாணவியை எரித்து கொள்ள முயன்ற மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த மாணவி சட்ட கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படிக்கும் தவசெல்வன் என்ற மாணவன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூர் தன்னை காதலிக்க சொல்லியுள்ளதாக தெரிகிறது. அதனால் அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவியை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சையில் உள்ளார். தீயிட்டு தப்பி சென்ற தவசெல்வனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.