தட்டி தூக்கிய தமிழ்நாடு போலீஸ்! 48 மணிநேரத்தில் நடந்தது என்ன?! திக் திக் நிமிடங்கள்…

Published by
மணிகண்டன்

திருச்சியில் பிரதான இடமான சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரிய நகைக்கடை தான் லலிதா ஜிவல்லரி.  இந்த நகைக்கடையில் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட அதிகாலை 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் கிலோ கணக்கில் கோடிக்கணக்கான நகைகளை இரு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இவர்கள் நகை கடையின் பின்புற சுவரில் ஒரு நபர் மட்டும் செல்லக்கூடிய அளவிற்கு துளையிட்டு, அதனுள் புகுந்து நகை கடைக்குள் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் உடல் முழுக்க மறைக்கும் அளவிற்கு உடை உடுத்தியும், முகத்தில் மாஸ்க் அணிந்தும், கைரேகை ஏதும் படாதவாறு கையுறை அணிந்தும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அவர்கள் முகம் தெரியவில்லை.
பின்னர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல நகை கடை ஊழியர்கள் கடையை திறந்தனர். திறந்தவுடன் உள்ளே தரைதளத்தில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தவுடன் அதிர்ச்சியாகி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் உடனடியாக விரைந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள், கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் முகம் இல்லை. கையுறை அணிந்து திருட்டில் ஈடுபட்டதால் கைரேகையும் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் செல்லும் போது மிளகாய் பொடி தூவி சென்றதால் மோப்ப நாய் கரூர் நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி விட்டது. இருந்தும் போலீசார் தங்களது முயற்சிகளை கை விடவில்லை.
இந்த வழக்குக்காக தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். முதலில் புதுக்கோட்டையில் தனியார் விடுதியில் சந்தேகிக்கும் படியாக வடமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதாக வந்த புகாரின் பெயரில், அவர்கள் 6 பேரையும் பிடித்தனர்.  அதில் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால், அவரது மண்டை பகுதி உடைந்து, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மீதம் 5 பேரையும் ரகசிய அறையில் வைத்து தீவிர விசாரணை செய்தனர். அவர்கள் கொள்ளையடிக்கவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்தும் தங்களுக்கு கிடைத்த சிறு சிறு தகவல்களை அடிப்படையாக கொண்டு தீவிரமாக தேடிவந்தனர். அந்த வேளையில் திருவாரூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடி உள்ளனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் அதில் ஒருவனை மட்டும் பிடித்துள்ளனர். பின்னர் அந்த வாகனத்தில் மூட்டையாக நகைகள் கட்டிவைக்கப்பட்டிருப்பது  தெரிய வந்துள்ளது. அந்த நகைகளை ஆராய்ந்த போது அவை அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் திருட்டு போனவை என நிரூபணம் ஆனது.
பின்னர், பிடிபட்ட அந்த ஒருவனை விசாரித்ததில் அந்த கொள்ளையன் பெயர் மணிகண்டன் எனவும், தன் கொள்ளையடித்த நகைகளில் தனது பங்கை மட்டும் பிரித்து எடுத்து வந்ததாகவும், விசாரணையின்போது கூறியுள்ளான். மேலும் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் பெயர் சீராத்தோப்பு சுரேஷ் எனவும் கூறியுள்ளான். அந்த சுரேஷின் உறவினர் முருகன் என்பவர் இதற்கு முன்னர் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பலே திருடனாக வலம் வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் தப்பி ஓடிய சுரேஷ் மேலும் அவரது உறவினர் முருகன் ஆகியோரையும் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகைக்கடை கொள்ளை வழக்கில் கிடைத்த சிறு சிறு தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 48 மணி நேரத்தில் கொள்ளையனையும், கொள்ளையடித்த நகைகளையும் கண்டுபிடித்த திருச்சி போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

12 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

25 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

41 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

44 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

50 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

55 mins ago