திருச்சி கொள்ளை சம்பவம்! போலீஸ் விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!

திருச்சி சாத்திரம் பகுதியில் உள்ள லலிதா ஜிவல்லரியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில் பல கோடிகள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக நபர்கள் இருப்பது கலவல்துறையினருக்கு தெரியவந்தது.
பின்னர், அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்ததால், மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால், அவரது மண்டை பகுதி உடைந்து, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மீதம் உள்ள 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாம்.
கொள்ளையர்கள் தங்கியிருந்த அறையில் நிறைய காலி பைகள் இருந்துள்ளன. அதில் பொருட்கள் ஏதும் வைக்கப்படவில்லை. கேஸ் வெல்டிங் வாங்கியதற்கான ரசீதும் கிடைக்க பெற்றது. மேலும் விசாரணையில் அடுத்ததாக பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பலகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025