திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை ..!மேலும் 6 கிலோ நகை பறிமுதல்..!
கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மூன்றாம் தேதி இரு சக்கரத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் வந்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை கைப்பற்றின.
சுரேஷ் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். சுரேஷ் என்பவர் திருவாரூர் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன். இதைத் தொடர்ந்து கனகவல்லியை போலீசார் கைது செய்தனர். பின்னர் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரிடம் பெங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தங்க நகைகளை பதுக்கி வைப்பதற்காக தகவல் கொடுத்தார். அதன் பேரில் பெங்களூர் போலீசார் முருகன் குறித்த இடத்தில் தோன்றிய போது தங்க நகைகள் கிடைத்தனர்.
அந்த நகைகளை பெங்களூர் போலீசார் பெங்களூர் எடுத்துச் செல்லும் பொது பெரம்பலூர் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.அப்போது லலிதா ஜுவல்லரி நகைகள் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தின் உதவியுடன் நகைகளை திருப்பித் தருவதாக எழுத்துமூலம் வாக்குறுதி கொடுத்தனர்.
அதன் பின்னர் முருகனையும் ,நகைகளையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான முருகன் கொடுத்த தகவலின் பேரில் மதுரையில் வாடிப் பட்டியை சார்ந்த கணேசன் என்பவரிடம் இருந்து ஆறு கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.கணேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.