வங்கியினை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்! ஜப்தி செய்யவிடாமல் தடுத்த வங்கி ஊழியர்க்ள்!

Default Image

திருச்சி மாவட்டம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் 2012 ஆம் ஆண்டு திருச்சி ஹெச்.டி.எப்.சி வங்கியில் புதிய வாகனம் வாங்குவதற்காக 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையில் தவணை தொகையை 17 மாதங்கள் கட்டியுள்ளார். இதில் மூன்று மாதங்கள் கட்டவில்லை என கூறி சந்திரசேகரின் வாகனத்தை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும், சந்திரசேகரின் வாகனத்தை நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். இதனை அடுத்து மேலும் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என சந்திரசேகரை வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த சந்திரசேகரன் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சந்திரசேகருக்கு 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வங்கி கொடுக்க வேண்டும். அல்லது, அதற்கு தகுந்த பொருட்கள் வங்கியிலிருந்து ஜப்தி செய்யபட வேண்டும் என குறிப்பிட்ட பட்டிருந்தது.

இந்த உத்தரவை அடுத்து நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞரும் திருச்சி HDFC வங்கிக்கு சென்று ஜப்தி பணியில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த வங்கி ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் நீதிமன்ற ஊழியர்கள், ‘நீதிமன்ற ஆணை மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மீண்டும் வருவோம்.’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்