சிறுமி எரித்து கொன்ற வழக்கு.. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

Default Image

திருச்சியில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் மகள், கங்காதேவி. 14 வயதாகும் அந்த சிறுமி, நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறதாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறினார். அதுமட்டுமின்றி, சிறுமி எரிந்து கிடந்த இடத்தை காட்டிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்தது.

இந்நிலையில், சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்கியது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும், 6-வது முறையாக தாமாக முன்வந்து இந்த விசாரணையை தொடங்குவதாகவும் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்