திருச்சி விவசாயி தற்கொலை! காரணம் இதுதானா?
திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் பெரியசாமி . இவர் ஒரு விவசாயி ஆவார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். 10 நாட்களுக்கு முன் வாழை தார்களை அறுத்து, லாரியில் கேரளாவுக்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால், வாழைத்தார்கள் சரியாக விலை போகவில்லை. மிக குறைந்த விலைக்கு வாழைத்தார் விற்றதால், பெரியசாமிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து, வாழை சாகுபடிக்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று புலம்பிக்கொண்டே இருந்தார். இந்த விரக்தியில் கடந்த 24ம் தேதி விஷம் குடித்துள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.