திருச்சி:பொதுமக்கள் வசதிக்காக திருச்சி மாநகராட்சியில் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வயலூர் சாலையில் கோ.அபிஷேகபுரம் கோட்டம் அருகில், மத்தியபஸ் நிலையம் அருகில், தில்லைநகர் பூங்கா ஆகிய மூன்று இடங்களில் திறந்தவெளி பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.இவ்வாறு உடற்பயிற்ச்சி கூடம் அமைத்தது பொதுமக்களிடம் அதிகஅளவில் வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை கூடுதல்இடங்களில் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து மாநகராட்சி ரூ.65லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதையடுத்து தற்போது 38வது வார்டு ராஜாராம் சாலை, சின்னசாமி பூங்கா ஆகிய இடங்களில் தலா ரூ.9.80 லட்சம் என மொத்தம் ரூ.19.80லட்சம் மதிப்பில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி துவங்கிஉள்ளது. அதேபோல் அண்ணாநகர் சாலையிலும் ரூ.45லட்சம் மதிப்பில் நடைபயிற்சியுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…