1 லட்சம் முகக்கவசங்களை தயாரித்த திருச்சி மத்திய சிறை கைதிகள்.!
திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்றால் முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் முகக்கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முகக்கவசங்கள் தேவைப்படுவோர் 99655 56681, 88385 43180 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.