ரூ.15 கோடி செலவில் திருச்சியில் கேன்சர் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் 15 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் 1 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தலா 15 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதேபோல் திருச்சியிலும் அமைக்கப்படும் என்றார். மேலும் உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.