திருச்சி விமான நிலையம் எச்சரிக்கை !பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்….
திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் திருச்சி விமான நிலையத்தில் பணிக்கு ஆள்தேர்வு நடைபெறுவதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்சி விமான நிலைய பணிக்கு ஆள்தேர்வு நடைபெறுவதாக செய்தி தாள்களில் வரும் மோசடி விளம்பரங்களை நம்பி பலர் பணம் கொடுத்து ஏமாந்து வருவதாகவும், மோசடி விளம்பரங்கள் செய்து ஏமாற்றும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் விமான போக்குவரத்து ஆணையம் மூலமே ஆள்தேர்வு நடைபெறும் என்றும், ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக பொதுமக்கள் கேள்வியுற்றால் www.aai.aero என்ற விமான போக்குவரத்து ஆணைய அதிகாரபூர்வ இணையதளத்தில் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.