வங்கி ஊழியரை காரில் கடத்தி 12 லட்சம் கொள்ளை.! மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தாத்தையங்கார் பேட்டை என்ற தா.பேட்டை பகுதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கனரா வங்கியில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்டார். குழந்தையில்லை. இவர் மட்டும் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தனியாக தா.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்துசாமியை மர்ம நபர்கள், காரில் கடத்தி, இரவு முழுவதும் வீட்டு சாவியை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அவரது வீட்டு சாவியை கொடுத்ததும், முத்துசாமி வீட்டில் பீரோவில் இருந்த 12 லட்சம் நகை, 6 பவுன் நகைகளை அந்த மர்ம நபர்கள் கொல்லையடித்துள்ளாராம். இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அடிபட்ட காயங்களுடன் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியாக சென்ற நபரை காரில் கடத்தி பணம் பறித்த அந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.