வைகோ மீதான தேசத்துரோக வழக்கு – ஜூலை 5 ல் இறுதி தீர்ப்பு !
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் இறுதி தீர்ப்பானது வரும் ஜுலை 5 ம் தேதி வெளியாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2009 ம் ஆண்டின் எம்பி மற்றும் எம்ஏ மீதான குற்றவழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து ஜூலை 5ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
வைகோ அவர்கள் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகும் சூழல் உருவாகியுள்ள நிலையில் இறுதி தீர்ப்பு வரவுள்ளது.