ட்வீட்டரில் ட்ரெண்டாகும் "#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்"
தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக தவித்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிற நிலையில், மக்கள் தண்ணீரை தேடி பல இடங்களில் அழைக்கின்றனர்.
இதனையடுத்து, பல்வேறு தலைவர்கள் இதற்கான வழிகளை சொன்னாலும் அவையெல்லாம் இனி வரும் காலங்களில் தான் நிறைவேற்ற முடியும். தற்போது உள்ள நிலைக்கு இதுவரை முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், ட்வீட்டரில் ” தமிழகம் காக்க மரம் வளர்ப்போம்” என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.