இனி செல்ல டிரெக்கிங் ஆர்வமா?டிரெக்கிங் என்பது என்ன?
ஒன்பது பேர் தேனி மலைப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்று உயிரிழந்துள்ள நிலையில், டிரெக்கிங் என்றால் என்ன, இளைஞர்களும், இளம் பெண்களும் டிரெக்கிங் செல்ல ஆர்வமாக இருப்பது ஏன் என்பதை பார்க்கலாம்.
டரக்கிங் என்பது மெதுவாக,கால்நடையாக, கடினமான வழிகளில்,குறிப்பாக மலைப் பகுதிகளில் பயணம் செய்வதைக் குறிப்பதாகும். ட்ரக்கிங் என்பது மிகவும் கடினமான, சவாலான செயல்பாடாகும். கடினமான, மலைப் பகுதிகளில் செல்ல வேண்டும் என்பதால் ட்ரக்கிங் செல்வதற்கு உடல் வலுவும், தாக்குப்பிடிக்கும் திறனும் வேண்டும்.
அதேநேரத்தில், குறிப்பிட்ட பகுதிகளை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தபடியே கால்நடையாகச் செல்வதையும், இதற்காக ஆள் அரவமற்ற வனப்பகுதிகளை தேர்வு செய்வதும் ட்ரக்கிங் வகையிலேயே சேர்கிறது. டரக்கிங் என்பதை மலையேற்றம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், மலையேற்றம் என்பது தனித்ததொரு செயல்பாடாகும். இயற்கையிலிருந்து விலகி, எந்திர கதியில் நகரச் சூழலில் வாழ்பவர்கள் இயற்கையை ரசிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் டரக்கிங், ஹைக்கிங், மலையேற்றம் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர்.
அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களிள் ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களது பணிச்சுமையில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளில் வார விடுமுறையை கழிக்க டிரெக்கிங் செல்வது வழக்கம். போடி, கொடைக்கானல், மூணாறு, நீலகிரி, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கும், இதேபோல இமயமலை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ட்ரக்கிங் செல்பவர்கள் உண்டு. இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்து, ஒருங்கிணைக்கும் டரக்கிங் கிளப்புகள் செயல்படுகின்றன. முறைப்படி செயல்படும் ட்ரங்கிங் கிளப்புகள் உரிய பயிற்சிகளைக் கொடுத்து, உடல் வலுவை சோதித்த பிறகே, ட்ரக்கிங் பயணங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.