செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தம்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கி சுமார் 5 மணி நேரமாக நடந்து இருதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஏற்கனவே மருத்துவக்குழு பரிந்துரை செய்திருந்த நிலையில், நேற்று அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருதய அறுவை சிகிச்சையை நிபுணர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழு, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின் தற்போது செந்தில் பாலாஜி வார்டுக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 நேரமாக சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்துக்கு இதயத்துக்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்துக்கு பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என்றும் செந்தில் பாலாஜியின் ரத்த ஆக்சிஜன் அளவு, இருதய துடிப்பின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வலி நிவாரணி மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…