ஜெயலலிதாவுக்கான சிகிச்சை – ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் விளக்கம்!
ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு வரை நலமாக இருந்ததாக மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த மறுவிசாரணையில், அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு எக்மோ கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது என்று மருத்துவர் விளக்கமளித்தார்.
செப்டம்பர் 29, 30, அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், பின் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது என மருத்துவர் பால்ரமேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு வரை நலமாக இருந்ததாக மற்றொரு மருத்துவர் நரசிம்மன் ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த மறுவிசாரணையின்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.