அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசு
எந்த அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு.
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20mg எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என அரசு கூறிருந்தது. அதுபோன்று சென்னையில் இதுவரை 1,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 98 சதவீதம் எந்த அறிகுறியும் இல்லாமல் தான் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, தொற்று கண்டறியப்பட்டால் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும்.
அதேபோல், தமிழக அரசு கூறிய வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அதனை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவோர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.