33 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவ குழு தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை!
தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக் குழுவினர் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக, தெரிவித்தார்.
தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாவுக்காகவும் சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் இன்று (செவ்வாய் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
“குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயமடைந்த மொத்தம் 24 பேரில், 4 பேருக்கு 70-90 சதவீதம் தீக்காயமும், 4 பேருக்கு 50-70 சதவீதம் தீக்காயமும், 13 பேருக்கு 50-90 சதவீதம் தீக்காயமும், 3 பேருக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 பிளாஸ்டிக் சர்ஜன், 6 மனநல மருத்துவர்கள், 5 பொது மருத்துவ நிபுணர்கள் உட்பட 33 பேர் அடங்கிய உயர்மட்ட மருத்துவக் குழு நிபுணர்கள் 24 மனிநேரமும் செயல்பட்டு வருகின்றனர். தவிர சிறப்பு செவிலியர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.