குளறுபடி : ஆசியர் தேர்வு வாரியம் விளக்கம்
கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் காலை 10 மணியளவில் தொடங்கியது.அதன்படி அறிவிக்கப்பட்ட மொத்த 814 காலி பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் கூடுதல் நேரம் வீண் ஆககுவதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து டிஆர்பி விளக்கம் அளித்து உள்ளது.முதன்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட்ட தேர்வில் நடைமுறைசிக்கலால் குளறுபடி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடைபெறவிருந்த தேர்வானது 115 மையங்களில் மட்டுமே நடந்து இதனால் தேர்வு எழுதிய தேர்வர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்