எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் – அமைச்சர் மதிவேந்தன்

Default Image

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண  திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு. 

அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண  திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் Hop-on, Hop-off   திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15 கோடியில் மேம்படுத்தப்படும். திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும். கன்னியாகுமரி, முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்கள் ரூ.6.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

வண்டலூர் கோவளம், ஏற்காடு சுற்றுலா தலங்களில் ரூ.75 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் அமைக்கப்படும். நான்கு முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி – ஒளி காட்சி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்