நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி! முதல்வர் நடவடிக்கை எடுப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.