பேச்சுவார்த்தையில் தோல்வி..போக்குவரத்து தொழிற்சங்கம் போராட்டம் அறிவிப்பு..!
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். போக்குவரத்து தொழிலாளர் ஊதியம் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும் ஆனால் இன்னும் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை குறித்து அரசு பேசவில்லை. அதே நேரத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்புவதில் ஒப்பந்தம் செய்யக்கூடிய பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இன்று சென்னையில் தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை அரசு எந்த வித உறுதியும் அளிக்கவில்லை,இதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை இரு பிரிவுகளாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பு அறிவித்துள்ளன. அதன்படி CITU , AITUC, HMS ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.