இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவ.27ம் தேதி அந்நாட்டு தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நவ.27ம் தேதி 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், இப்போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்த சூழல், 34-வது மாவீரர் தினத்தில் துவாரகா பெயரில் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் – உச்சநீதிமன்றம்
கடந்த சில காலமாக AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நாம் விரும்பும் நபர்களை அப்படியே உருவாக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. துவாரகா பெயரில் வீடியோ வெளியானதும் அப்படி இருக்குமா அல்லது உண்மையானதா என பல்வேறு கேள்விகள் எழுந்தன. சமீபத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட், கஜோல் உள்ளிட்டோரின் போலியான ஏஐ வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாகின.
அதன்படி, தற்போது வெளியான துவாரகா வீடியோ விவகாரத்திலும், அதுகுறித்து ஆராய வேண்டும் என்றும் அப்போது மட்டுமே உண்மைநிலை தெரியவரும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
புயல் எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காணொளியில் காட்டுவது வேதனை அளிக்கிறது. பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் தமிழ்மக்கள் தங்கள் இதயங்களில் வைத்திருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழிப்பே, அரசியலின் முதற்படி என்ற பிரபாகரனின் வார்த்தையை நிலைநிறுத்தி செயல்படுவோம். பொதுவெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகுந்த பதிலடியாகவும் அமைந்துள்ளது. அதே வேளையில் இவ்விவகாரத்தினை பேசும் பொருளாக கொண்டு கையாளுகின்ற சமூக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…