தெருக்களில் இருக்கும் ஆங்கில பெயர்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது…! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தெருக்களில் இருக்கும் ஆங்கில பெயர்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், ஹார்வார்டில் தமிழ் இருக்கை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் செயல்பட துவங்கும்.சென்னை மாநகரில் உள்ள தெருக்களில் இருக்கும் ஆங்கில பெயர்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக, பொன்.மாணிக்கவேலுக்கு உதவியாக தொல்லியல் ஆதாரங்களை வழங்கி வருகிறோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.