எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

Default Image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாபாரியின் எடை இயந்திரத்தை தூக்கி வீசியதால் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்ற பகுதியில் வசித்து வருவபர் ராஜா இவர் குளிர்பானம் மற்றும் மளிகைக் கடை ஆம்பூரில் நடத்திவருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, மேலும் ஊரடஙகை மீறி நேற்று மாலை நேரத்தில் ராஜா தனது கடைகளை திறந்துவைத்தார்.

இந்நிலையில் உமராபாத் தலைமை காவலர் ரகுராமன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்குள் சென்று அந்த கடையில் இருந்த ஒரு எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கிவீசி எரிந்தார். இதனால் எடை இயந்திரம் உடைந்து சேதமானது.

மேலும் ரகுராமன் எடை இயந்திரத்தை தூக்கி வீசிய காட்சி அங்குள்ள காணொளியில் பதிவானது, இதனால் திருப்பத்தூர் மாவட்டம் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ரகுராமனை ஆயுதப்படைக்கு திருப்பி அனுப்பிவிட்டு, நேரில் சென்று எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை கடையில் உரிமையாளர் ராஜனுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்