தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை பாரதி கண்ணம்மா.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் திருநங்கைகளும், மாற்றுப்பாலினச் சிறுபான்மையினரும் போட்டியிடலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் சென்னையில் ஒரு திருநங்கை போட்டியிட்டார்.
இதனிடையே, மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி, இந்த நிலைமையை உருவாக்கி நீதியைப் பெற்றுத்தந்தவர்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவை தெற்கில், பாஜக வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் ஆகிய வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக பாரதி கண்ணம்மா போட்டியிடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025