ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் திருநங்கை…!

Default Image

திருநங்கை ஸ்மிதா தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார். 

இன்று பெற்றோர்கள் செய்த பாவத்திற்காக பிள்ளைகள் பலனை அனுபவிப்பது போல, பல இடங்களில் தவறான பெற்றோர்களாலும் சில இடங்களில் தங்களது சூழ்நிலை நிமித்தமாகவும் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் அதிகமானோர் உள்ளனர்.

இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பாங்கு அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த மனம் வருவதுண்டு. அந்த வகையில், சென்னையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கை ஸ்மிதா, அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளை தாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் அந்த திருநங்கை தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக அமைத்துள்ளார். ஓவியக்கலை அவருக்கு கைவந்த கலை போல மிகவும் அழகாக வரையும் திறமை கொண்ட அவர், தன்னுடைய ஓவியங்களை கண்காட்சியாக அமைந்தது மட்டுமல்லாமல், அதனை இணையதளம் மூலம் விற்பனையும் செய்கிறார்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார். திருநங்கை ஸ்மிதா ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தனது திருநங்கை சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளுக்கும் தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். இவரது செயலுக்கு அப்பகுதியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்