#BREAKING: உருமாறிய கொரோனா …தடுக்க என்ன நடவடிக்கை.. உயர்நீதிமன்றம் கேள்வி ..!
தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டனியில் இருந்து வருபவர்களிடம் மட்டும் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் எந்த நாட்டில் இருந்து வருபவர்களிடம் சோதனை செய்ய வேண்டும், அதற்கு தகுந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என திருச்செந்தூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உருமாறிய பரவுவதை தடுக்க அனைத்து விமானங்களையும் கண்காணித்து வருவதாகவும், அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகும் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து, வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.