தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்..!

tamilnadu govt

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள  நிலையில் இதற்காக அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 நகராட்சி துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் பால் வளம் கூடுதல் தலைமை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குனராக விஜூ மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரிஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு என்று தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி கலைஞன் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நுகர் பொருள் வாணிப கழக இயக்குனராக அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் பிரபாகர் தமிழக சாலை பணித்திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும் பிரபாகர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்