தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம்..!
தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் மே 16ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளனர்.