தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!

தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.
அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குனராக சிவராசு ஆகியோரை நியமித்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், ஐஏஎஸ் மூத்த அளவிலான கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரின் தற்காலிகப் பதவியை ஓராண்டு காலத்திற்கு உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பதவியானது இயக்குனர் என்ற கேடர் பதவிக்கு சமமான அந்தஸ்து மற்றும் பொறுப்புகள் தமிழக அரசு அறிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.